சூதாடிய 8 பேர் கைது

சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-06-01 20:00 GMT
மதுரை
மதுரை அண்ணாநகர் கோமதிபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள விடுதியில் உள்ள ஒரு அறையில் ஒரு கும்பல் பணம் வைத்து சீட்டு விளையாடுவது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது பி.பீ.குளத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியன் (வயது 52) உள்பட 8 பேர் என தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 8 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 செல்போன்கள், 25,580 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்