கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு

உப்பிலியபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-06-01 18:36 GMT
உப்பிலியபுரம்,

உப்பிலியபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

மூதாட்டி சாவு

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள எரகுடி ஏ.வி.ஆர்.காலனியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 85). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவரை, கடந்த 2 நாட்களாக காணவில்லை என்று உறவினர்கள் தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று எரகுடி அருகே உள்ள 80 அடி ஆழ தோட்டத்து கிணற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் தீயணைப்பு துறையினர் மூலம் நாகம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில் அவர், கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்