நடப்பாண்டில் 5,900 மண்மாதிரிகள் சேகரிக்க இலக்கு-வேளாண் இணை இயக்குனர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டில் 5,900 மண்மாதிரிகள் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று வேளாண் இணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டில் 5,900 மண்மாதிரிகள் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று வேளாண் இணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
16 வகையான சத்துகள்
பயிர் வளர்ச்சிக்கு தேவையான 16 வகை சத்துக்கள் மண்ணில் உள்ளன. மண்ணில் உள்ள சத்துகளின் அளவை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உரமிடுதல், பயிர் தேர்வு செய்வதன் மூலம் விவசாயிகள் உரசெலவினை குறைத்து அதிக மகசூல் பெறலாம்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மண் ஆய்வு செய்திட வசதியாக தற்போது அனைத்து வட்டாரங்களிலும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. பயிர் சாகுபடி செய்வதற்கு மண் பரிசோதனை செய்தல் அவசியமாகும்.
5,900 மாதிரிகள் சேகரிக்க..
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.