நீலகிரியில் புதிதாக 583 பேருக்கு கொரோனா உறுதி

நீலகிரியில் புதிதாக 583 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-06-01 17:17 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 19 ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 583 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 661 ஆக உயர்ந்து உள்ளது.

 இதுதவிர 604 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 15 ஆயிரத்து 613 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 94-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3 ஆயிரத்து 954 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரியில் மொத்தம் 371 ஆக்சிஜன் படுக்கைகளில் 354 படுக்கைகள் நிரம்பி உள்ளதாகவும், 17 படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்