வாய்மேடு அருகே, குளித்துக்கொண்டிருந்த போது பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 5 பவுன் சங்கிலி பறிப்பு

வாய்மேடு அருகே, குளித்துக்கொண்டிருந்த போது பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-06-01 16:14 GMT
வாய்மேடு:
வாய்மேடு அருகே, குளித்துக்கொண்டிருந்த போது பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 பவுன் சங்கிலி பறிப்பு
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் ராமகோவிந்தன் காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன்.  இவருடைய மனைவி சூரியகாந்தி (வயது58). இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வெளியே குளித்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த வைக்கோல்போரில் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், சூரியகாந்தி முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துள்ளார். இதனால் சூரியகாந்தி திருடன், திருடன் என சத்தம் போட்டுள்ளதால் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அதற்குள் அங்கிருந்து மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
மர்ம நபருக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் வாகீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். பெண் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரிடம் இருந்து 5 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் செய்திகள்