கொரோனாவுக்கு பெண் உள்பட 7 பேர் பலி

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Update: 2021-05-30 19:25 GMT
அரியலூர்:

268 பேருக்கு தொற்று
அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் மொத்தம் 268 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை 11,034 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 104 பேர் உயிரிழந்துள்ளனர்.
7 பேர் பலி
இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 85, 80, 75, 61, 52 வயதுடைய ஆண்கள் 5 பேரும், 56 வயதுடைய பெண் ஒருவரும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயதுடைய ஆண் ஒருவரும் என மொத்தம் 7 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 8,354 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,569 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்