ஊரடங்கு விதிமுறை மீறிய 22,723 வாகனங்கள் பறிமுதல்
ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஊரடங்கு விதிமுறை மீறிய 22,723 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என்று தென்மண்டல ஐ.ஜி. அன்பு தெரிவித்து உள்ளார்.
மதுரை,

கொரோனா பரவலை தடுக்க வருகிற 7-ந்தேதி வரை தளர்வற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியே சுற்றி திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. அன்பு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வாகனத்தில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இதுவரை 22 ஆயிரத்து 80 மோட்டார் சைக்கிள்கள், 355 மூன்று சக்கர வாகனங்களும், 288 நான்கு சக்கர வாகனங்களும் என மொத்தம் 22 ஆயிரத்து 723 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
எனவே பொதுமக்கள் தங்களின் நலன் கருதி முழு ஊரடங்கு காலத்தில் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளிேய வருவதையும் கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும். பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது என பல்வேறு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். அரசின் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றி திரியும் நபர்கள் மீது காவல் துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஊரடங்கு விதிமுறை மீறிய 22,723 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என்று தென்மண்டல ஐ.ஜி. அன்பு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. அன்பு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ்
அதன்படி ஊரடங்கு அமல்படுத்திய நாள்முதல் இதுவரை முககவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடிய நபர்கள் மீது 3 லட்சத்து 82 ஆயிரத்து 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சமூக இடைவெளியை பொது இடத்தில் கடைபிடிக்காத நபர்கள் மீது இதுவரை 13 ஆயிரத்து 653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
22,723 வாகனங்கள் பறிமுதல்