காய்கறி பைக்குள் மறைத்து 4 கிலோ கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது

பாலமேட்டில் நடந்த வாகன சோதனையில் காய்கறி பைக்குள் மறைத்து 4 கிலோ கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-29 21:05 GMT
அலங்காநல்லூர்,

பாலமேட்டில் நடந்த வாகன சோதனையில் காய்கறி பைக்குள் மறைத்து 4 கிலோ கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

4 கிலோ கஞ்சா பறிமுதல்

ஊரடங்கையொட்டி பாலமேடு பஸ் நிலைய பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 பேர் வந்த மோட்டார் சைக்கிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை பரிசோதித்த போது காய்கறிகளுக்குள் கஞ்சாவை மறைத்து கடத்தி சென்றது தெரிய வந்தது. 4 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

போலீசார் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 34) அதே ஊரை சேர்ந்த வீரபாண்டி (31) என்று தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்