மேம்பால கட்டுமான பணிகள், தொழிற்சாலைகள் இயங்க தடை

மேம்பால கட்டுமான பணிகள், தொழிற்சாலைகள் இயங்க தடை

Update: 2021-05-29 19:01 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை யாக மேம்பால கட்டுமான பணிகள் மற்றும் அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தடுப்பூசி போட முன்னுரிமை

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பு மாநகராட்சி பகுதியில் தொற்று அதிகமாக இருந்தது. தற்போது ஊரக பகுதிகளிலும் தொற்று விகிதம் அதிகரித்து வருகிறது.

இதற்கு அனுமதியின்றி பல தொழிற்சாலைகள் இயங்குவதே காரணமாக கூறப்படுகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். எனவே அவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

ஊரக பகுதிகளில் தொற்று

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஆனால் இந்த அறிவிப்பை மீறி ஊரக பகுதிகளில் பல இடங்களில் அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இயங்கி வந்து உள்ளது. அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவர் மூலம் மற்ற ஊழியர் களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தொற்று பரவ தொடங்கியது. இதனால் தான் ஊரக பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித் தது என்று சுகாதார துறையினர் கூறுகிறார்கள். 

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மேம்பால கட்டுமான பணிகள் மற்றும் அத்தியாவ சிமற்ற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தொழிற்சாலைகள் இயங்க தடை 

இது குறித்து அமைச்சர் அர.சக்கரபாணி கூறியதாவது

தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. மருத்துவம் சார்ந்த தொழிற்சாலைகள் இயங்க தடை இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்து உள்ளார்.

கோவை மாவட்டத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்க அனு மதிப்பது என்று கலெக்டர் தலைமையில் அலுவலர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

 அத்தியாவசிமற்ற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் மேம்பால கட்டுமான பணிகளை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்