முழு ஊரடங்கால் வெற்றிலை விலை கடும் விழ்ச்சி
முழு ஊரடங்கால் வெற்றிலை விலை கடும் விழ்ச்சி அடைந்துள்ளது.
நொய்யல்
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூர வெற்றிலை ஆகிய ரகங்களை பயரிட்டுள்ளனர். பின்னர் அவற்றை பறித்து மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தளர்வில்லாத முழு ஊரடங்கின் காரணமாக வெற்றிலை பறித்து விற்க முடியாமல் உள்ளது. இதனால் அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 104 கவுளி கொண்ட ஒரு சுமை வெள்ளைக்கொடி வெற்றிலை ரூ. 7 ஆயிரத்திற்கு விற்றது. தற்போது ரூ.2,500-க்கும், 104 கவுளிகொண்ட கற்பூர வெற்றிலை ஒரு சுமை ரூ.6 ஆயிரத்திற்கு விற்றது தற்போது ரூ.1,600-க்கும் விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.