குளித்தலை
குளித்தலை அருகே உள்ள வலையபட்டி பகுதியில் மதுப்பாட்டில்கள் வைத்து விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 29) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 23 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.