கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை
கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 18 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 18 பேருக்கும், கருப்பு பூஞ்சை பாதிப்பிற்கு உண்டான சிகிச்சை முன்னெச்சரிக்கையாக அளிக்கப்படுகிறது.
18 பேர்
தற்போது வரை அந்த 18 பேருக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படவில்லை. அவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த 18 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.