கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 493 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 493 பேர் பாதிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,078 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 31 ஆயிரத்து 793 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 26 ஆயிரத்து 148 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5 ஆயிரத்து 456 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 189 ஆக உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.