மெட்டுவாவி பகுதியில் வெளி நபர்கள் வருவதை தடுக்க சாலையில் தடுப்பு

மெட்டுவாவி பகுதியில் வெளி நபர்கள் வருவதை தடுக்க சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-29 17:52 GMT
நெகமம்

நெகமம் அருகே உள்ள மெட்டுவாவி பகுதியில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் முழு ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தப்பகுதிக்கு வெளிநபர்கள் வருவதை தடுக்க சாலையில் முள்வேலி வைத்தும், மண்ணை கொட்டியும் தடுப்புகள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, வெளிநபர்கள் எங்கள் கிராமத்துக்குள் வருவதை தடுக்க தடுப்பு வைத்து கண்காணித்து வருகிறோம். உள்ளூர் நபர்கள் அவசர தேவைக்காக வெளியே செல்ல மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்