கோவையில் இன்று 3,692 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

தமிழகத்தில் இன்று 30 ஆயிரத்து 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-29 17:44 GMT
சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 30 ஆயிரத்து 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 31 ஆயிரத்து 759 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 6 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 486 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்:-

அரியலூர் - 256
செங்கல்பட்டு - 1,314
சென்னை - 2,705
கோவை - 3,692
கடலூர் - 590
தர்மபுரி - 356
திண்டுக்கல் - 352
ஈரோடு - 1,743
கள்ளக்குறிச்சி - 347
காஞ்சிபுரம் - 711
கன்னியாகுமரி - 927
கரூர் - 527
கிருஷ்ணகிரி - 493
மதுரை - 828
நாகை - 613
நாமக்கல் - 897
நீலகிரி - 505
பெரம்பலூர் - 307
புதுக்கோட்டை - 343
ராமநாதபுரம் - 308
ராணிப்பேட்டை - 493
சேலம் - 1492
சிவகங்கை - 198
தென்காசி - 370
தஞ்சாவூர் - 797
தேனி - 592
திருப்பத்தூர் - 434
திருவள்ளூர் - 1072
திருவண்ணாமலை - 686
திருவாரூர் - 563
தூத்துக்குடி - 691
திருநெல்வேலி - 416
திருப்பூர் - 1,697
திருச்சி - 1,099
வேலூர் - 423
விழுப்புரம் - 660
விருதுநகர் - 519

மொத்தம் - 30,016

மேலும் செய்திகள்