தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-05-29 17:12 GMT
ராமநாதபுரம், 
​கொரோனா பெருந்தொற்று நோய் 2-ம் அலை பரவலை தடுக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநில குழுவிற்கான மின்னஞ்சல் முகவரி: tnngocoordination@gmail.com தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இக்குழுக்கள் பாலமாக செயல்படும்.​தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் கீழ்கண்ட இணையத்தில் https://ucc.uhcitp.in/ngoregistration பதிவு செய்து இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்டங்களில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூகநல அலுவலரை அணுகவும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9150346853மின்னஞ்சல் முகவரி: district27@tncwrm.in மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்