ஊரடங்கை மீறி திறந்திருந்த இறைச்சி கடைக்கு சீல்
ஊரடங்கை மீறி திறந்திருந்த இறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மதுரை,மே
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுரை திடீர்நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காஜிமார் தெருவில் உள்ள இறைச்சி கடையில் ஆட்டுக்கறி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் திடீர்நகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் வீட்டில் வைத்து ஆட்டை வெட்டி கறியை கடைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் இது குறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து கடையை பூட்டி சீல் வைத்து அபராதம் விதித்தார். மேலும் கடையில் இருந்த 5 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.