மூலைக்கரைப்பட்டியில் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு
மூலைக்கரைப்பட்டியில் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இட்டமொழி:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றுபவர்களை போலீசார் கண்காணித்து வாகனங்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் வருகிறார்கள்.
இந்த நிலையில் மூலைக்கரைப்பட்டியில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றும் பொதுமக்களையும், இருசக்கர வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்களையும் போலீசார் டிரோன் மூலம் நேற்று கண்காணித்தனர்.
மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் தலைமையில் போலீசார் டிரோன் மூலமாக பஜார் பகுதிகள், முக்கிய தெருக்களை கண்காணித்தனர்.