நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர்கள் நடராஜன் (வயது 36), அரி ராமசுப்பிரமணியன் (25), சங்கரபாண்டி (31). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மங்கம்மாள் சாலை பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை திருடி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது.
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், 3 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது சங்கரபாண்டி தப்பி ஓடி விட்டார். மற்ற 2 பேரை பிடித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜன், அரிராமசுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ஆடு மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.