கிணத்துக்கடவில் சாலையில் வீணாக ஓடிய குடிநீர்
கிணத்துக்கடவில் சாலையில் வீணாக ஓடிய குடிநீர்
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சியில் இருந்து குறிச்சி, குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கோவை அருகே உள்ள குறிச்சி, குனியமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக கிணத்துக்கடவில் தரைமட்ட தொட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது.இங்கு தண்ணீர் சேகரிக்கப்பட்ட பின்னர், குறிச்சி, குனியமுத்தூர் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் கிணத்துக்கடவில் உள்ள குடிநீர் தொட்டி அருகே குழாயில் விரிசல் ஏற்பட்டது. எனவே அவற்றை சரிசெய்யும் பணி நடந்தது. இதற்காக குடிநீர் குழாயில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் கிணத்துக்கடவு பெரியார் நகர் முதல், செம்மொழி கதிர் நகர் சாலை வரை சாலையில் குடிநீர் வீணாக ஓடியது.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் இந்த நேரத்தில் குடிநீரை இப்படி வீணாக்காமல் அதை பயனுள்ள வகையில் செய்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.