கீழக்கரை,
கீழக்கரையில் நவாஸ்கனி எம்.பி. மற்றும் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வலியுறுத்தலின் பேரில் கீழக்கரையில் தெற்குதெரு, மேலத் தெரு, கிழக்குத் தெரு, போன்ற அனைத்து தெருக்களிலும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நேற்று வடக்குத்தெரு தைக்கா வளாகத்தில் வடக்குத்தெரு ஜமாஅத், நாசா சமூக அமைப்பு மற்றும் சுகாதாரத் துறை இணைந்து தடுப்பூசி முகாம் நடத்தின.
முகாமில் 141 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும் இதேபோல் ஒவ்வொரு தெருக்களிலும் முகாம் நடைபெறும் என்று வட்டார மருத்துவர் ராசிக்தீன் கூறினார். முகாமில் தாசில்தார் முருகேசன், ரகுமான் பிரதர்ஸ் சாதிக், வடக்குத்தெரு ஜமாத் துணை தலைவர் அப்துல் ஹமீது, நாசா சமூக அமைப்பு தலைவர் மகுரூப், மற்றும் நசுருதீன், மிர்சா தி.மு.க. நகர் செயலாளர் பசீர் அகமது, இளைஞரணி அமைப்பாளர் ஹமீது சுல்தான், எபன், மீரான் அலி, நயீம், அஸ்மத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.