முதியவர் தற்கொலை
வடமதுரை அருகே விஷ கிழங்கை தின்று முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொம்பேறிபட்டி காடையனிர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 71).
இவர் தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பொன்னுச்சாமி சம்பவத்தன்று விஷ கிழங்கை தின்றார்.
இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னுச்சாமி நேற்று முன்தினம் இறந்தார்.
இந்த தற்கொலை குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.