தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், சிவக்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி முனியசாமிபுரம் 1-வது தெருவைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் டேனியல்ராஜ் (வயது 34) என்பவர் காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான டேனியல்ராஜ் மீது கஞ்சா மற்றும் திருட்டு வழக்குகள் உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.