அம்மா உணவகத்தில் இலவச உணவு

அம்மா உணவகத்தில் இலவச உணவு

Update: 2021-05-28 12:44 GMT
உடுமலை
உடுமலை கல்பனா சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழை எளிய மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளைகளில் உணவு வகைகள் வழங்கப்பட்டு வந்தது. 
இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் திருப்பூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சரவணக்குமார், அம்மா உணவகத்தில்  காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளைகளிலும் ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும்படி அறிவுறுத்தி உள்ளார். அதன்படி உடுமலை அம்மா உணவகத்தில் நேற்று முதல் காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளைகளிலும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதை நேற்று நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்