3 பேர் பலி

தாராபுரத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் பலியாகி விட்டனர்.

Update: 2021-05-28 12:38 GMT
தாராபுரம்
தாராபுரத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும்  3 பேர் பலியாகி விட்டனர்.
கொரோனா
தாராபுரம்  வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமையில் சுகாதார துறையினர் நேற்றுமுன்தினம் கொளத்துப்பாளையம் பொன்னாபுரம் அலங்கியம் உள்ளிட்ட பகுதியில் 250க்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா பாிசோதனை செய்தனர். 
நேற்று அதன் முடிவுகள் வெளியான நிலையில் அதில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திாியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
3 பேர் பலி
மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் சுகாதார துறையினா் கிருமிநாசினி தெளித்தனா். மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தாராபுரம் அரசு ஆஸ்பத்திாியில்  நேற்று ஆண்கள் 63   67 மற்றும் 70 ஆகிய வயதுடையவர்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.அவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தனர். 

மேலும் செய்திகள்