சூரமங்கலம் பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம்
கொரோனா தடுப்புவிழிப்புணர்வு பிரசார வாகனம்
சூரமங்கலம்:
சேலம் மேற்கு சரக போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் பிரசாரம் செய்யப்படுகிறது. சேலம் சூரமங்கலம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 6 வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. பிரசார வாகனத்தை சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுவரையில் சூரமங்கலம் மேற்கு கோட்ட போலீஸ் எல்லை பகுதியில் 35 வாகனங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அப்போது கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சூரமங்கலம், ஜாகீர் அம்மாபாளையம், குரங்குச்சாவடி, மாமாங்கம், திருவாக்கவுண்டனூர், 5 ரோடு, புதுரோடு, பழைய சூரமங்கலம், சேலத்தாம்பட்டி, ஆண்டிப்பட்டி, கந்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக பிரசாரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.