ஈரோட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வாங்க காத்திருந்த மக்கள்
ஈரோட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வாங்க மக்கள் காத்திருக்கின்றனா்.
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் பல இடங்களில் தனியார் பங்களிப்புடன் மாநகராட்சி மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நடந்து வருகிறது. நேற்று கருங்கல்பாளையம் பகுதியில் குடிநீர் பிடிக்க அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
காலை 9 மணி வரை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. எனவே குடிநீர் விற்பனை நேரம் குறைக்கப்பட்டதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் வர வேண்டும் என்று பொதுமக்கள் கேன்களுடன் ஒரே இடத்தில் வந்து குவிந்து வருகிறார்கள்.
இதுபோல் குடிநீர் விற்பனை மையங்கள் உள்ள அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் கூடி வருகிறார்கள்.