கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே பெரியஊர்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 49). இவர் வாவிடமருதூர்-அலங்காநல்லூர் செல்லும் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர். கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்று தப்பிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலமங்கலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்து சேதுபதியை கைது செய்தனர்.