திருமானூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருமானூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2021-05-27 19:10 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
திருமானூர் உயர் அழுத்த மின் பாதையில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருமானூர், முடிகொண்டான், மஞ்சமேடு, திருவெங்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்