அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 8 பேர் பலி

அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-05-27 19:09 GMT
அரியலூர்:

276 பேருக்கு தொற்று
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் மொத்தம் 276 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 10,283 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் 85 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். இதில் அரியலூர் அரசு மருத்துவமனையில் தான் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பெண்கள் உள்பட 8 பேர் பலி
இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தலா 56 வயதுடைய 2 ஆண்களும், 55, 67 வயதுடைய பெண்கள் 2 பேரும், 40, 63, 78, 80 வயதுடைய ஆண்கள் 4 பேரும் என மொத்தம் 8 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதால் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா நோயாளிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
2,393 பேருக்கு சிகிச்சை
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 7,797 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,393 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்