கரூர் மாவட்டத்தில் புதிதாக 409 பேருக்கு கொரோனா தொற்று

கரூர் மாவட்டத்தில் புதிதாக 409 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் இறந்துள்ளனர்.

Update: 2021-05-27 18:11 GMT
கரூர்
ஆரம்ப கால கட்டத்தில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஓரிருவர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 200-ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கின் காரணமாக தொற்று சற்று குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி நேற்று மாவட்டத்தில் புதிதாக 409 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 190 பேர் குணமடைந்ததால் அவர்கள் `டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 2,884  போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்