பேட்டபாளையத்தில் ஊரடங்கை மீறி திறந்த மளிகை கடைக்கு சீல்
பேட்டபாளையத்தில் ஊரடங்கை மீறி திறந்த மளிகை கடைக்கு சீல்
மோகனூர், மே.28-
மோகனூர் அருகே பேட்டபாளையம் பகுதியில் உள்ள மளிகை கடையில் முழு ஊரடங்கை மீறி வியாபாரம் செய்வதாக மோகனூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் ஊரடங்கை மீறி வியாபாரம் செய்து கொண்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் அந்த மளிகை கடையை பூட்டி சீல் வைத்தனர்.
======