18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை அருகே பட்டமங்கலத்தில் 18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.

Update: 2021-05-27 18:01 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே பட்டமங்கலத்தில் 18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பூசி
மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சியில் 14 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
முகாமிற்கு வரும் பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி பாடும் பணி தொய்வில்லாமல் நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 
தொற்றில் இருந்து விடுபடலாம்
தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கைகளை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
 தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றினால் முழுமையாக கொரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் என்றார். 
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, உதவி கலெக்டர் பாலாஜி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, ரெஜினாராணி மற்றும் அரசு டாக்டர்கள், செவிலியர்கள் இருந்தனர்.
திருவெண்காட்டில்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் நடந்து வருகின்றன. அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு போதுமான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு வருகிறது என்றார்.
ஆய்வின் போது பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன், சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வைத்தீஸ்வரன்கோவில்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் பொது சுகாத்தாரத்துறையுடன் இணைந்து 18 வயது முதல் 45 வயது வரையிலான பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் குகன் அனைவரையும் வரவேற்றார். டாக்டர் விஷ்ணுகார்த்திக், சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன், செவிலியர்கள் அருள்ஜோதி, சாரதா ஆகியோர் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர். முகாமை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவருடன் தி.மு.க. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அலெக்சாண்டர், பேரூர் கழக செயலாளர் அன்புச்செழியன், மாவட்ட பிரதிநிதி சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்