தர்மபுரியில் வேளாண்மை அதிகாரி கொரோனாவுக்கு பலி

தர்மபுரியில் வேளாண்மை அதிகாரி கொரோனாவுக்கு பலியானார்.

Update: 2021-05-27 17:59 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட வேளாண்மை வணிக உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அமுதவல்லி (வயது 42). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தர்மபுரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்