173 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 4 பேர் இறந்தனர். மேலும் 173 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-27 17:56 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 4 பேர் இறந்தனர். மேலும் 173 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

173 பேருக்கு தொற்று

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, வீட்டு தனிமையில் உள்ளவர்கள் என 2 ஆயிரத்து 15 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையே கொரோனா சிகிச்சை முடிந்து 171 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

4 பேர் பலி

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 4 பேர் இறந்தனர். .இதில் சிவகங்கையை சேர்ந்த 69 வயதான மூதாட்டி ஒருவரும், 48 வயதுள்ள பெண் ஒருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறந்தனர். இதே போல ்79 வயதுள்ள முதியவர் ஒருவரும், 64 வயதுள்ள முதியவர் ஒருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தனர்.

மேலும் செய்திகள்