பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பூவந்தி அருகே பெண்ணை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

Update: 2021-05-27 17:46 GMT
திருப்புவனம்,

பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது வெங்கட்டி கிராமம். இந்தக் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி புஷ்பராணி (வயது 45). புஷ்பராணியின் அக்காள் கணவர் சோலகிரி. புஷ்பராணிக்கும் சோலகிரிக்கும் நிலப்பிரச்சினை குறித்து ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் புஷ்பராணிக்கு சொந்தமான வேலி போடப்பட்ட நிலத்தை சோலகிரி, அவரது மகன்கள் பிரபு, சுகுமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பொக்லைன் மூலம் சுத்தம் செய்ய முற்பட்டனர். அப்போது அங்கு சென்று புஷ்பராணி தடுத்துள்ளார். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து புஷ்பராணியை அவதூறாக பேசி கையால் தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்