6 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது

கடமலைக்குண்டு அருகே 6 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது

Update: 2021-05-27 16:57 GMT
கடமலைக்குண்டு:

கடமலைக்குண்டு அருகே உள்ள மயிலாடும்பாறையில் இருந்து மூலக்கடை செல்லும் சாலையின் இருபுறத்திலும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளன. 

நேற்று இரவு 9 மணி அளவில், தோட்டப்பகுதியில் இருந்து 6 அடி நீள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றது. இதனை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் இதுகுறித்து மயிலாடும்பாறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

பின்னர் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, கண்டமனூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த பாம்பை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்