மே 27: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

தமிழகத்தில் இன்று 33 ஆயிரத்து 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-27 15:18 GMT
Image courtesy : AFP
சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 33 ஆயிரத்து 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 78 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 30 ஆயிரத்து 63 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 43 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 474 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு இன்றைய விவரம்:-

அரியலூர் - 276
செங்கல்பட்டு - 1,392
சென்னை - 2,779
கோவை - 4,734
கடலூர் - 613
தர்மபுரி - 304
திண்டுக்கல் - 376
ஈரோடு - 1,699
கள்ளக்குறிச்சி - 448
காஞ்சிபுரம் - 751
கன்னியாகுமரி - 979
கரூர் - 409
கிருஷ்ணகிரி - 469
மதுரை - 1,395
நாகை - 777
நாமக்கல் - 883
நீலகிரி - 434
பெரம்பலூர் - 274
புதுக்கோட்டை - 385
ராமநாதபுரம் - 256
ராணிப்பேட்டை - 544
சேலம் - 987
சிவகங்கை - 173
தென்காசி - 461
தஞ்சாவூர் - 936
தேனி - 564
திருப்பத்தூர் - 508
திருவள்ளூர் - 1,221
திருவண்ணாமலை - 734
திருவாரூர் - 487
தூத்துக்குடி - 667
திருநெல்வேலி - 454
திருப்பூர் - 2,074
திருச்சி - 1,617
வேலூர் - 487
விழுப்புரம் - 798
விருதுநகர் - 1,016

மொத்தம் - 33,361

மேலும் செய்திகள்