வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

Update: 2021-05-27 14:24 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலைத் தெருவைச் சேர்ந்தவர் அங்கப்பன். இவருடைய மகன் மருதுபாண்டி (வயது 21). இவரை செய்துங்கநல்லூர் போலீசார் ஒரு கொள்ளை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மருதுபாண்டியை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

மேலும் செய்திகள்