பழனி அரசு மருத்துவமனையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரத்ததானம்
பழனி அரசு மருத்துவமனையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரத்ததானம் செய்தனர்.
பழனி :
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பழனி கிளை சார்பில் பழனி அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி நகர தலைவர் மாரிக்கண்ணு தலைமையில் சங்கத்தை சேர்ந்த 12 பேர் பழனி அரசு மருத்துவமனைக்கு வந்து ரத்ததானம் செய்தனர். அவர்களை பழனி அரசு மருத்துவமனை அலுவலர் டாக்டர் உதயகுமார் பாராட்டினார்