வேலூர் மாவட்டத்தில் 438 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் 438 பேருக்கு கொரோனா
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த வாரம் தினமும் 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இந்த வாரம் 500-க்கும் கீழ் கொரோனா குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 433 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் மேலும் 438 பேருக்கு கொரோனா உறுதியானது. அதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 40 ஆயிரத்து 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 35 ஆயிரத்து 299 பேர் குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 73 பேர் மருத்துவமனைகள், வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 661 பேர் உயிரிழந்துள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் போடப்பட்டு வருகிறது. எனவே அருகேயுள்ள முகாம்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.