4 கடைகளுக்கு அதிகாரிகள்சீல்

தாராபுரத்தில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு அதிகாரிகள்சீல் வைத்தனர்.

Update: 2021-05-27 12:05 GMT
தாராபுரம்
தாராபுரத்தில் ஊரடங்கை மீறி செயல்பட்ட  4 கடைகளுக்கு அதிகாரிகள்சீல் வைத்தனர்.
கடைகள் 
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு வருகிற 31ந் தேதி வரை தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. 
அதன்படி ஊரடங்கு காரணமாக  டீக்கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. ஆனால்  பெட்ரோல் பங்குகள், மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் ஆகியவைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால் தாராபுரம் நகரப்பகுதிகளில் நேற்று அரசு விதிமுறைகளை மீறி திறப்பதாக சில கடைகள் திறந்து இருப்பதாக வருவாய்த்துறையினருக்கு புகார் வந்தது.
 4 கடைகளுக்கு சீல்
இதையடுத்து தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் உத்தரவின் பேரில் தாராபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன்மற்றும் வருவாய் ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 மளிகைக்கடைகள், 1பேக்கரி உட்பட 4 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்