கொரோனா தடுப்பூசி பற்றி பயம் வேண்டாம்

கொரோனா தடுப்பூசி பற்றி பயம் வேண்டாம்-தமிழரசி எல்.எல்.ஏ. பேச்சு

Update: 2021-05-26 20:30 GMT
மானாமதுரை
மானாமதுரையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தொடங்கி வைத்தார். பின்னர் தடுப்பூசி பயன்களை எடுத்து கூறினார். அப்போது தடுப்பூசி போடுவதால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. அது கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும். எங்கு சென்றாலும் முக கவசம் அணிவது நம்மையும், நம் குடும்பத்தையும் எப்போதும் பாதுகாக்கும் என்றார். பின்னர் தடுப்பூசி போட வந்தவர்களை ஒவ்வொருவராக நலம் விசாரித்த தமிழரசி, தடுப்பூசி பயன்களையும் எடுத்து கூறினார். 

மேலும் செய்திகள்