238 பேருக்கு கொரோனா தொற்று

சிவகங்கை மாவட்டத்தில் 238 பேருக்கு கொரோனா தொற்று

Update: 2021-05-26 20:30 GMT
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் 120 பேருக்கு தொற்று இருப்பதை கண்டறிந்தனர். மற்றவர்கள் தனியார் பரிசோதனை நிலையங்களில் உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 2,024 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 173 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்