கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-26 19:32 GMT
இட்டமொழி:

மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்த முத்துமனோ என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

இதனை கண்டித்தும், இதற்கு காரணமான சிறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நாங்குநேரி ஒன்றியம் தெற்கு ஆரம்பூண்டார்குளத்தில், பருத்திக்கோட்டை நாட்டார் சமுதாய நல சங்கம் சார்பில் 34-வது நாளாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பருத்திக்கோட்டை நாட்டார் நலச்சங்க தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள், தெற்கு ஆரம்பூண்டார்குளம் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்