ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள்களில் ஊர் சுற்றிய 4 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள்களில் ஊர் சுற்றிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-26 19:29 GMT
திசையன்விளை:

திசையன்விளை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றிய செல்வ மருதூர் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கதிரேசன் (வயது 62), திசையன்விளை மன்னர் ராஜா கோவில் தெருவைச் சேர்ந்த தேவராஜ் (58) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதேபோல் திருக்குறுங்குடி வட்டக்குளம் பகுதியில் ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவைகள் இன்றி மோட்டார் சைக்கிள்களில் வந்த பட்டபிள்ளைபுதூரை சேர்ந்த முத்துராமலிங்கம், ஏர்வாடியை சேர்ந்த அப்துல்சமது ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்