திசையன்விளையில் கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்கள் தடை செய்யப்பட்டது
திசையன்விளையில் கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்கள் தடை செய்யப்பட்டது.
திசையன்விளை:
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருபவர்களில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டு அவர்கள் வசிக்கும் தெருக்களும் தடை செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.
அதன்படி திசையன்விளை புளியடி கீழத்தெரு, சுடலை ஆண்டவர் தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டது.
நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் எட்வின் ஆகியோர் மேற்பார்வையில் டெங்கு பணியாளர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் செய்து வருகின்றனர்.
மேலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் திசையன்விளை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு கொள்ளும் படி திசையன்விளை நகர பஞ்சாயத்து சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.