ராஜபாளையம் பகுதியில் சாரல் மழை

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

Update: 2021-05-26 19:00 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் நகர், சத்திரப்பட்டி, மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் அனைத்து இடங்களிலும் மழை நீர் தேங்கி சகதிகாடாக காட்சி அளிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் ஆற்று பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேத்தூர், தளவாய்புரம் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது.

மேலும் செய்திகள்