திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 692 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 692 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மேலும் 692 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று வரை 38 ஆயிரத்து 281 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 30 ஆயிரத்து 514 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 7 ஆயிரத்து 376 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 391 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.