ஆக்சிஜன் சிலிண்டர் தீ விபத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு

ஆக்சிஜன் சிலிண்டர் தீ விபத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2021-05-26 17:15 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

 முகாமுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி தலைமை தாங்கி பேசும்போது, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களில் கசிவு உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். நன்றாக மூடப்பட்ட நிலையில் உள்ளதா, சிறிதளவு கசிவு ஏற்பட்டாலும் வெளியே உள்ள வெப்பநிலை காரணமாக தீ பிடிக்க வாய்ப்பு உள்ளது. 

தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், சிலிண்டர்களை பராமரிப்பது குறித்து விளக்கி கூறினார். முகாமில் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் சந்திரகுமார், ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன், மருத்துவ அலுவலர் ரவிசங்கர் மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்